Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை அணிய தடை

View previous topic View next topic Go down

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை அணிய தடை

Post  birundha on Thu Jan 17, 2013 2:31 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் டி-ஷர்ட், ஷார்ட்ஸ், குட்டைப்பாவாடை போன்ற அநாகரீக உடைகளை அணிந்து வருகிறார்கள்

இதை தடுக்க தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது

இதுபற்றி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:-

திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிலர் மேற்கத்திய கலாசார உடை அணிந்து வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் உடை கட்டுப்பாடு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்

இதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை போன்ற ஆடைகளை உடுத்த தடை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற உடைகளை அணிந்து வரும் பக்ர்களை கோவில் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். இந்த ஆடை கட்டுப்பாடு பற்றி 2 மாதம் வரை விளம்பரப்படுத்துவோம்.

பெண்கள் திருப்பதி கோவிலுக்கு சுடிதார், புடவை அணிந்து வரலாம். ஆண்கள் பேண்ட், வேட்டி-சட்டை அணிந்து வரலாம்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum