Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வேர்க்கடலை குழம்பு

View previous topic View next topic Go down

வேர்க்கடலை குழம்பு

Post  oviya on Sat Mar 16, 2013 10:42 am


தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை. – அரை கப்
தேங்காய் துண்டுகள். – 2 (அரைக்கவும்)
கடுகு. –1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு. –1 டீஸ்பூன்
சீரகம். –1டீஸ்பூன்
புளி. – தேவையான அளவு
வெங்காயம்.– 1 ஸ்பூன்
மிளகாய். – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள். – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை.– சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு.– தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலை அரை கப் எடுத்து ஊற வைத்து, வேக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விடவும் அதனுடன்அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

வேக வைத்த வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவே ப்பிலை போட்டு, பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.
சுவையான வோக்ககடலை குழம்பு தயார். இதை சாதம், தோசை, இட்லி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

மருத்துவக் குணங்கள்:

பா‌ஸ்பர‌ஸ், கால்சிய‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum