Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஃபுரூட் பச்சடி

View previous topic View next topic Go down

ஃபுரூட் பச்சடி

Post  oviya on Sat Mar 16, 2013 10:43 am

தேவையான பொருள்கள்:

பழங்கள்(கலவையாக) = 2 கப்
வெல்லம் = 1 டேபிள் ஸ்பூன்
தேன் = 2 டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி = அரை ஸ்பூன்
ஏலக்காய் பொடி = அரை ஸ்பூன்
முந்திரி பருப்பு = கால் கப்
உலர்ந்த திராட்சை = கால் கப்
நெய் = 1 டேபிள் ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

பழங்களுடன் வெல்லம், தேன், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய் சேர்த்து கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

சுவையான ஃபுரூட் பச்சடி தயார். இதை விருப்பமான உணவோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

பழங்கள் வைட்டமின்கள், கனிமங்கள், ஃபைபர் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. மேலும் பழங்கள் அதிக ஆரோக்கியம், ஊட்டச்சத்து மிக்கது. இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய் போன்ற நோய்கள் குறையும்.

ஜாதிக்காயில் புரதம், அமினோ அமிலம், வைட்டமின், தாதுக்கள் உள்ளது. அவை மாதவிடாய் பிரச்சனைகள், அஜீரணம், இரத்த அழுத்தம், இருமல், தசை மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் கிருமி நாசினிகள், நுண்ணுயிர்க்கொல்லி, போன்ற அதன் மருத்துவ குணங்கள் கொண்டது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum