Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


புளிக்குழம்பு

Go down

புளிக்குழம்பு

Post  oviya on Sat Mar 16, 2013 10:50 am

தேவையான பொருள்கள்:

புளி = எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
தனியா பொடி = 3 ஸ்பூன்
சர்க்கரை = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெந்தயம் = அரை ஸ்பூன்
பட்டை = 2
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

புளியைத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயையும், தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக் குழம்பை விட்டு மூடி கொதிக்க விடவும். இடைஇடையே கிளறி விடவும்.

பொடி வாசனை அடங்கியதும் சர்க்கரையைச் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி தூவவும்.

சுவையான புளிக்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பிரட், இட்லி, தோசை, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:


புளியில் கலோரி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 ஆகியவை காணப்படுகிறது.

ம‌லச்சிக்கல் மற்றும் காய்ச்சல் குறையும். பித்தம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். மேலும் வீக்கம், தொண்டை புண், அம்மை நோய் ஆகியவை குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum