Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி

Go down

காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி

Post  oviya on Sat Mar 16, 2013 7:37 pm

தேவையான பொருள்கள்:

காலிஃப்ளவர் = 1 (பெரியது)
கடலை பருப்பு = 100 கிராம்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
இஞ்சி = அரையங்குலம்
பூண்டு = 10 பல்
வெங்காயம் = 2
கரம் மசாலா பொடி = அரை ஸ்பூன்
தேங்காய் = அரை மூடி
பட்டை = 2
பிரிஞ்சி இலை = 1
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை உதிர்த்துக் கொள்ளவும். இதை வெது வெதுப்பான வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 10 நிமிடம் போட்டு அலசி எடுக்கவும். கடலை பருப்பை, மஞ்சள் பொடி, தோல் நீக்கி தட்டிய இஞ்சி சேர்த்து நெத்தாக வேக விட்டுக் கொள்ளவும்.

தேங்காய் துருவி இதனோடு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் காலிஃப்ளவர் வெந்த கடலைப்பருப்பு, மிளகாய் பொடி, வெங்காயம், பூண்டு சேர்த்து உப்பு, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் அரை கப் தண்ணீர் விட்ட பின் மூடி வைத்து 5 நிமிடம் வைக்கவும். நடுவில் ஓரிரு முறை கிளறி விடவும்.

பிறகு திறந்து தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 2 நிமிடம் மூடி வேக விடவும். பின் திறந்து சற்று வற்றும் வரை வைத்து இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

சுவையான காலிஃப்ளவர் கடலைப்பருப்பு கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் ஆகிய‌வற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:


காலிஃப்ளவரில் வைட்டமின் B, C, மற்றும் K உள்ளது. குறைந்த அளவு கலோரி, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் உயர் ஃபைபர் கொண்டது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். வாய்வு தொல்லைகள் குறையும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum