Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சிறுகீரை சாறு

Go down

சிறுகீரை சாறு

Post  oviya on Sat Mar 16, 2013 7:42 pm

தேவையான பொருள்கள்:

சிறுகீரை = அரை கட்டு
பச்சை மிளகாய் = 1
தக்காளி = 3
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
இஞ்சி = சிறிது
பச்சரிசி = 1 ஸ்பூன்
சோம்பு = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

சிறுகீரை இளசாக இருந்தால் கீரை வேண்டாம். வேரே போதுமானது. வேரை ஒரு கப் எடுத்து அலசி லேசாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வெங்காயம் மெல்லியதாக நறுக்கி சேர்க்கவும். பச்சரிசியை பொடி செய்து கொள்ளவும்.

மிளகு, சீரகம் உடைத்து போடவும். இஞ்சி தட்டி சேர்க்கவும். இதை லேசாக உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்து வரும் போது பொடி செய்த அரிசி மற்றும் சோம்பை தூவி இறக்கவும்.

சுவையான சிறுகீரை சாறு தயார். இந்த சாறு நல்ல மணத்தோடும், ருசியோடும் இருக்கும். உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது.

மருத்துவ குணங்கள்:

சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறையும். கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும்.

மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.

avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum