Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


புடலங்காய் பொரியல்

Go down

புடலங்காய் பொரியல்

Post  oviya on Sat Mar 16, 2013 7:47 pm

தேவையான பொருள்கள்:

புடலங்காய் = அரை கிலோ
வெங்காயம் = 500 கிராம்
பச்சை மிளகாய் = 6
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
ஓமம் = சிறிது
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

புடலங்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை பஞ்சு போன்ற பகுதியையும் நீக்கி விடவும். பின்பு மெல்லிய அரை வட்ட வளையங்களாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் புடலங்காய் நறுக்கியதைச் சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கி உப்பு போட்டு கால் கப் நீர் விட்டு மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்துத் திறந்து அதிகப்படியான நீரை இறுத்து விட்டு ஓமம் அல்லது ஓமவல்லி இலை சேர்க்கவும். பிறகு கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

சுவையான புடலங்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum