Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வாழைப்பூ கூட்டு

View previous topic View next topic Go down

வாழைப்பூ கூட்டு

Post  oviya on Sat Mar 16, 2013 8:17 pm

தேவையான பொருள்கள்:

வாழைப்பூ = 1
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 3
தேங்காய் = கால் மூடி
தனியா பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
பெருங்காயம் = சிறிதளவு
மிளகாய் வற்றல் = 2
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கடலை பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கறிவேப்பிலை = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். பிறகு அலசி எடுக்கவும்.
பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து க் குழைய வேக விட்டுக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணேய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வாழைப்பூவை சேர்த்து உப்புப் போட்டு வதக்கவும்.
2 நிமிடம் வதக்கியதும் அரைத்த தேங்காய், தனியா பொடி செர்த்து சிறிது நீர் தெளித்து 2 நிமிடம் மூடி வேக விடவும்.
பிறகு திறந்து வைத்து இதனோடு கடைந்த பருப்பை சேர்த்து வதக்கவும். வாழைப்பூ வெந்தவுடன் சிறிது கொத்தமல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்.

சுவையான வாழைப்பூ கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பொங்கல் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum