Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தக்காளிக்காய் கூட்டு

View previous topic View next topic Go down

தக்காளிக்காய் கூட்டு

Post  oviya on Sat Mar 16, 2013 8:24 pm

தேவையான பொருள்கள்:

தக்காளிக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
வெங்காயம் = சிறிது
மஞ்சள் பொடி = தேவையான அளவு
மிளகாய் பொடி = தேவையான அளவு
தனியா பொடி = தேவையான அளவு
சீரகம் = சிறிது
தேங்காய் துருவல் = சிறிது
கொத்தமல்லி இலை = சிறிது
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

முற்றலான தக்காளியை வாங்கி சிறிய தக்காளியாக இருந்தால் நாலாக வெட்டிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குழைய வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தேங்காயை துருவிக் கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சிறிது சீரகம், உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீரில் வேக விடவும்.
வெந்ததும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, வெந்த பருப்பு சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வேக விட்டு தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

சுவையான தக்காளிக்காய் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, தோசை, பொங்கல், உப்புமா மற்றும் அடை ஆகியவற்றோடு பரிமாறலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum