Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வாழைத்தண்டு நவதானிய கூட்டு

View previous topic View next topic Go down

வாழைத்தண்டு நவதானிய கூட்டு

Post  oviya on Sat Mar 16, 2013 8:35 pm

தேவையான பொருட்கள்:

கொண்டைக் கடலை.
மொச்சை.
பாசிப்பயறு.
முழு உளுந்து.
வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்.
துவரம்பருப்பு -ஒரு கப்.
மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை.
புளி – சிறு நெல்லிக்காய் அளவு.

வறுத்துப் பொடிக்க:

தனியா – ஒரு டீஸ்பூன்.
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 5.
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பயறு வகைகளை இரவில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு துணியில் கட்டி வைக்கவும். அவ்வப்போது மூட்டை யைக் குலுக்கிவிட்டு, தண்ணீர் தெளிக்கவும். மூன்றாவது நாள் நன்கு முளைத்துவிடும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட் களை வறுத்துப் பொடிக்கவும். வாழைத் தண்டையும், முளை கட்டிய பயறுகளையும் வேகவைத்து, அதோடு பருப்பையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது, புளியைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு போட்டு, அரைத்த பொடியையும் போட்டுக் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வரும் போது, கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு இறக்கவும். (புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum