Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கேரட் குருமா

View previous topic View next topic Go down

கேரட் குருமா

Post  oviya on Sat Mar 16, 2013 8:43 pm


தேவையானப்பொருட்கள்:

கேரட் - 1/4 கிலோ
வெங்காயம் ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்மிளகாய் -நான்கு
இஞ்சி- அரை அங்குலத்துண்டு
பூண்டு – நான்கு பற்கள்
தேங்காய் – 1/2 கோப்பை
கசகசா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத்தேக்கரண்டி
தனியாத் தூள் -அரைத்தேக்கரண்டி
பச்சைபட்டாணி – ஒரு கையளவு
நல்லெண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி- ஒரு பிடி
பட்டை -தலா 2
கிராம்பு -தலா 2
ஏலம் -தலா 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி.
உப்புத் தூள் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
கேரட்டை சிறியதாக நறுக்கவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு அது வதங்கியவுடன் தனியாத்தூளைப் போட்டு பின்பு கறிவேப்பிலை மற்றும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்
தக்காளி நன்கு குழைந்தவுடன் கேரட்டைக் கொட்டி வதக்கவும்.
அதைத் தொடர்ந்து தேங்காய் கலவையைப் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூளையும் போட்டு இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்
கேரட் நன்கு வெந்தவுடன் பச்சைபட்டாணியைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum