Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

View previous topic View next topic Go down

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு

Post  oviya on Sun Mar 17, 2013 7:54 pm


தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு = அரை கிலோ
கேரட் = கால் கிலோ
பச்சை மிளகாய் = 50 கிராம்
இஞ்சி = 1 அங்குலம்
வெந்தயம் = 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி = அரை ஸ்பூன்
புளி = 50 கிராம்
எண்ணெய் = அரை கப்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி புளியங்கொட்டை அளவில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி முடிந்த வரை பிழிந்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி விட்டுத் துருவிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தை வாசனை வரும் அளவு சிவக்க வறுத்துப் பொடி செய்யவும்.
புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். இதனோடு தேவையான அளவு உப்பைக் கலந்து வைக்கவும். பச்சை மிளகாயை நுனியில் சிறிதள‌வு கீறி வைக்கவும்.
எண்ணெய் முழுவதையும் வாணலியில் வைத்து புகை வரும் படி காய விட்டுப் பின் பாதி எண்ணெயை பிரித்து ஆற விடவும். காயும் எண்ணெயில் முதலில் உருளைக்கிழங்கை சேர்த்து அதன் ஈர‌ம் வற்றி சொட சொடப்பு அடங்கும் வரை பொரிக்கவும்.
ஓசை அடங்கியதும் துருவிய இஞ்சியையும், பிழிந்த கேரட்டையும் சேர்க்கவும். இதனுடன் கூட பச்சை மிளகாயையும் சேர்க்கவும். மீண்டும் இதை நீர் சொட சொடப்பு அடங்கி ஓசை குறையும் வரை வதக்கவும்.
அடுத்து உப்பு சேர்த்து புளி கரைசலைக் கொட்டி நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து புளி நீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும்.
இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்க கூடாது.

சுவையான உருளைக்கிழங்கு கேரட் தொக்கு தயார். இது புது விதமான சுவையுடன் இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றோடும், மற்ற வகை ரைஸோடும் , சப்பாத்தி, பூரி, பொங்கல் ஆகியவற்றோடும் பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum