Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


செளசெள பொரியல்

Go down

செளசெள பொரியல்

Post  oviya on Sun Mar 17, 2013 8:07 pm


தேவையான பொருள்கள்:

செளசெள = அரை கிலோ
பச்சை மிளகாய் = 2
சீரகம் = 1 ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
பொட்டுக்கடலை = 4 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
சோம்பு = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

செளசெளவை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பச்சை மிளகாய், சீரகம், பொட்டுக்கடலை இவற்றோடு சேர்த்து ஒன்றிரண்டாக சதசதப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை,1 வற்றல் மிளகாய் தாளிக்கவும்.
அடுத்து செளசெளவை சேர்த்து சிறிது வதக்கி உப்பு, அரைத்த மசாலா சேர்த்து சிறிது வதக்கி சிறிது நீர் விட்ட பின் மூடி வேக விடவும்.
6 நிமிடம் வெந்தால் போதும். இடையில் ஒரு முறை கிளறி விடவும். இறக்கி தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

சுவையான செளசெள பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

செளசெளவில் கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் பி, சி, உள்ளன. கால்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதி பெறுகின்றது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum