Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாவடிக்கா பப்பு குழம்பு

Go down

மாவடிக்கா பப்பு குழம்பு

Post  oviya on Sun Mar 17, 2013 8:26 pm

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு = 200 கிராம்
பெரிய மாங்காய் = 2
சின்ன வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 2
இஞ்சி = சிறு துண்டு
சாம்பார் பொடி = 4 ஸ்பூன்
புளி = அரை எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் = 4 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை தோலோடு சிறு துண்டுகளாக நறுக்கி பருப்பை நீக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும். இஞ்சியை தட்டிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து இஞ்சியோடு குக்கரில் வைத்து வேக விட்டு கரைந்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டவும்.
எண்ணெய் காய விட்டு கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து அதனோடு மாங்காய், தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனோடு சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும். கடைசியாக இறக்கும் போது கடைந்த பருப்பைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான மாவடிக்கா பப்பு குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை, அடை, உப்புமா, பொங்கல் போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

மாங்காயில் வைட்டமின் A, B1, C மற்றும் E அதிகம் உள்ளது. ஃபைபர், கால்சியம், பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம், அழற்சி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க செய்கிறது.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீரிழிவு, இரத்தகொதிப்பு போன்ற நோய்கள் குறையும். உடல் வலி மற்றும் தோல் நோய்கள் குறையும். எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum