Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வடைமோர் குழம்பு

View previous topic View next topic Go down

வடைமோர் குழம்பு

Post  oviya on Mon Mar 18, 2013 7:31 pm

தேவையான பொருள்கள்:

தயிர்- ஒரு கோப்பை

வடை தயாரிக்க:

கடலைப் பருப்புபருப்பு-கால் கோப்பை
துவரம் பருப்பு-கால் கோப்பை
காய்ந்த மிளகாய்-நான்கு
தனியா-ஒரு தேக்கரண்டி
சோம்பு-அரை தேக்கரண்டி

குழம்பிற்கு அரைக்க தேவையானவை:

தேங்காய்- கால் கோப்பை
ஊறவைத்த பருப்பு- இரண்டு தேக்கரண்டி
தனியா- இரண்டு தேக்கரண்டி
பச்சைமிளகாய்-இரண்டு
இஞ்சி-ஒரு துண்டு
சீரகம்-ஒரு தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
மஞ்சத்தூள் -கால் தேக்கரண்டி
பெருங்காயம்-கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய்-தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு -ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்-இரண்டு
கறிவேப்பிலை-இரண்டு கொத்து
கொத்தமல்லி- சிறிது

செய்முறை:

வடைக்கு தேவையான பருப்புகளை குறைந்தது அரைமணி நேரம் ஊறவைத்து அதிலிருந்து இரண்டு தேக்கரண்டி மோர்க்குழம்பிற்கு அரைக்க தனியே எடுத்து வைக்கவும்.
பின்பு மீதியுள்ள பருப்புடன் காய்ந்த மிளகாய் தனியா சோம்பு மற்றும் சிறிது உப்பைச் சேர்த்து கெட்டியாக அரைத்து சூடான எண்ணெயில் சின்ன சின்ன வடைகளாக தட்டி போட்டு பொரிக்கவும்.
தயிரில் தேவையான நீரை ஊற்றி அதில் உப்பு மஞ்சள்தூள், பெருங்காயம் மற்றும் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து மோராக கலந்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து தயாரித்து வைத்துள்ள மோரில் கலந்து அடுப்பில் வைக்கவும்.
மோர் நன்கு சூடேறி நுரைக்க ஆரம்பித்ததும் இறக்கி வைத்து பொரித்து வைத்துள்ள வடைகளைப் போட்டு ஊறவிடவும்.
பின்பு அதன் மேலாக கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கொட்டி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum