Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெண்டக்கா புளியா

View previous topic View next topic Go down

வெண்டக்கா புளியா

Post  oviya on Tue Mar 19, 2013 8:21 pm

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் = அரை கிலோ
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 4
தனியா = 2 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
புளி = நெல்லிக்காயளவு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு

செய்முறை :

வெண்டைக்காயை அலம்பி நீர் வடிய விட்டு துடைத்து விட்டு காம்பையும், நுனியையும் நீக்கி விட்டு நீள வாட்டில் கிறவும்.
முழுவதுமாக கீறி பிரித்து விடாமல் முக்கால் பாகம் கீறி விட்டு முனையில் ஒட்டியே இருக்கும் படி வைக்கவும்.
1 ஸ்பூன் எண்ணெயில் 2 மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம், கடலை பருப்பு இவற்றை சிவக்க வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டுப் பொரித்து எடுக்கவும். 5 நிமிடம் பொரித்து வதக்கினால் போதும்.
இதை சற்று ஆற விட்ட பின். பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு அடைக்கவும்.
வாணலியில் கெட்டியாக கரைத்த புளியை உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இந்த வெண்டைக்காயை மெதுவாக போட்டு 1 நிமிடம் வதக்கவும். புளி கரைசல் கெட்டியாகும் போது தான் வெண்டைக்காய்களைப் போட வேண்டும்.
அடுத்து சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 2 மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.

சுவையான வெண்டக்கா புளியா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி, நூடுல்ஸ், பிரியாணி, ஃபிரைட் ரைஸ், தோசை, ஆப்பம் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum