Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெண்டைக்காய் மடர் முந்திரி கறி

View previous topic View next topic Go down

வெண்டைக்காய் மடர் முந்திரி கறி

Post  oviya on Tue Mar 19, 2013 8:26 pm


தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் = அரை கிலோ
முந்திரி = 10 பருப்பு
பச்சை பட்டாணி(மடர்) = 10 பருப்பு
தேங்காய் = கால் மூடி
சீரகம் = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தனியா பொடி 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
ஏலக்காய் = 2
கிராம்பு = 2
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காய் அலம்பி துடைத்த பின் காம்பு நுனி நறுக்கி நீக்கிய பின் வெண்டைக்காயை அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும்.
தேங்காய், சீரகம். முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் நீளவாட்டில் கீறிக்கொள்ளவும்.
வாணலியில் பாதி எண்ணெய் விட்ட பின் வெண்டைக்காயை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும். இவ்வாறு வதக்கினால் வெண்டைக்காயில் உள்ள குழகுழப்பு அகன்று விடும்.
இதனோடு மிளகாய் பொடி, தனியா பொடி, உரித்த பட்டாணி, உப்பு சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டுக் கொதிக்க விடவும். மசாலா நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும். 2 நிமிடம் கொதித்தால் போதும்.
அடுத்து வாணலியில் மீதி பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிறிது தட்டிய ஏலம், கிராம்பு இரண்டையும் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

சுவையான வெண்டைக்காய் மடர் முந்திரி கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, பிரட், நூடுல்ஸ் போன்றவற்றோடு சாப்பிடால் சுவையாக இருக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum