Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இஞ்சி அல்வா

View previous topic View next topic Go down

இஞ்சி அல்வா

Post  oviya on Tue Mar 19, 2013 8:47 pm


தேவையான பொருட்கள்:

இஞ்சி – 100 கிராம்
வெல்லம் (பொடித்தது) – 2 கப்
விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 10
ஏலக்காய்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும்.
வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைத்தெடுக்கவும்.
ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து வாணலியில் நெய்விட்டுக் கிளறவும்.
அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து தொடர்ந்து கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum