Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சதாப்பு இலை

View previous topic View next topic Go down

சதாப்பு இலை

Post  oviya on Wed Mar 20, 2013 9:22 am

மருத்துவப் பயன்கள்:

இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன்படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலியவற்றால் ஏற்படுகின்ற சுரம், பிரசவ மாதர்களின் வேதனை இவைகளை நீக்கும்.
இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக் குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும்,
இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தத்தை குறைக்கும்.
பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது ஈரில் ரத்தம் வருவதை குணமாக்கும்.
நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் குறைக்கும்.
பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகளை குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குறைக்கும்.
இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 – 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி ஆகியவற்றை குறைக்கும்.
சதாப்பிலையை நிழலில் உலர்த்தி, சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை 1 தனியா 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 – 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் பெண்களுக்கு உண்டான உதிரச்சிக்கலை குறைக்கும்.
சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலியவைகளையும் குறைக்கும்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum