Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பனீர் புளிக்குழம்பு

View previous topic View next topic Go down

பனீர் புளிக்குழம்பு

Post  oviya on Wed Mar 20, 2013 9:27 am


தேவையான பொருள்கள்:

பனீர் = 100 கிராம்
புளி = எலுமிச்சை அளவு
தக்காளி = 100 கிராம்
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = சிறிதளவு
தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
மிளகாய் வற்றல் = 2
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:

பனீரை அரை அங்குல துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல், ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும்.
எண்ணெயில் சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து அதனோடு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் இதில் குழம்பை ஊற்றி மூடி கொதிக்க விட்டு இடைஇடையே சிறிது கிளறி விடவும். பொடி வாசனை அடங்கியதும் பொரித்த பனீரை சேர்த்து மேலும் சிறிது கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான பனீர் புளிக்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ், பரோட்டா, அடை, ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றோடு பரிமாறலாம்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum