Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அவுரி அவுரி அவுரி

Go down

அவுரி அவுரி அவுரி

Post  oviya on Wed Mar 20, 2013 10:08 pm

மருத்துவக் குணங்கள்:

அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும். வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை விளை நிலங்களில் நெல் அறுவடைக்குப் பின் அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல அவுரி 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும். அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது. எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள்.
ஆனால் இப்போது அவுரி நெல்லை விட மதிப்பு வாய்ந்த தாவரமாக மாறிவிட்டது. நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில் அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது .குறிப்பாக தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் ஏற்றுமதி பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவுரி சுமார் 3000எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும் தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
இன்னும் உலகில் இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது. நாம் தான் சந்தோஷமாக நமது இயற்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்
அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது .
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்.
இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும் .
இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம்.
அவுரி இலை சாறு பல விஷங்களை நீக்கும். சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம் . அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதயவையின்
விஷம் நீங்கும் .
இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம் சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி முறை உள்ளது. ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவ பொருளை நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும். அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.
அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம். பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரமிப்பதற்க்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டு வந்த மருந்துகளின் வீரியத்தைக் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது தான் வழக்கம்.
இப்போதெல்லாம் வயல்களில் அவுரி இல்லாததால் மாடுகளுக்கும் கண்டதைத் தின்று பலவித நோய்கள் வருகின்றன. பசுவின் பால் கூட இப்போது சுத்தமாக இல்லை நஞ்சு கலந்துவிட்டது .
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum