Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அழிஞ்சில் அழிஞ்சில்

View previous topic View next topic Go down

அழிஞ்சில் அழிஞ்சில்

Post  oviya on Thu Mar 21, 2013 9:57 am

மருத்துவக் குணங்கள்:

நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது.
அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.
அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை, மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
சிவப்பு அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.
அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.
அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.
அங்கோலம் என்று சொல்லப்பட்ட அழிஞ்சில் கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால் நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவற்றை குறைக்கும்.
அழிஞ்சில் வேர் விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள் நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு வர விரைவில் ஆறும்.
அழிஞ்சில் வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும், குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம், விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய், விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு பிடிப்புகளுக்கு நன்று.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum