Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பேய்மிரட்டி பேய்மிரட்டி

View previous topic View next topic Go down

பேய்மிரட்டி பேய்மிரட்டி

Post  oviya on Thu Mar 21, 2013 9:59 am

மருத்துவக் குணங்கள்:

பசி மிகுதல், குடல் வாயு அகற்றுதல்,வியர்வை பெருக்குதல், காய்ச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல் ஆகிய குணங்களையுடையது.
பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம் ஆகியவைகள் குறையும்.
பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம் குறையும்.
இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம் குறையும்.
இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வேதுபிடிக்கச் சுரம், தலைவலி முதலியன குறையும்.
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் குறையும்.
இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி குறையும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச்சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் குறையும்.
ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா குறையும்.
10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டுவறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்துகொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச்சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி.யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குறையும்.
பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை,அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றை குறைக்க பயன்படுகிறது.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum