Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அரைக் கீரை

View previous topic View next topic Go down

அரைக் கீரை

Post  oviya on Thu Mar 21, 2013 10:41 am

மருத்துவக் குணங்கள்:

அரைக் கீரையில் இரும்புச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பத்திய வகை உணவுக்குத் தேவையான கீரை இது. சீதளத்தைத் தடுக்கும். பலவீனத்தைப் போக்கும். இந்தக் கீரையைப் பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவிவிட்டு, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அரைக் கீரையில் வைட்டமின் ஏ,சி இரண்டும் அதிக அளவில் இருக்கின்றன. புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்துக்களும் அதிக அளவில் இருக்கின்றன.
இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும். தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமையை தரும்.
உடல் நலக் குறைவினால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை கடைந்தும், மிளகு ரசத்தையும் உணவில் சேர்த்து கொண்டால் சத்தான உணவாகும்.
அரைக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டுக் கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படிச் சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும்
பசியை உண்டாக்குவதும், நுரையிரல் வியாதியை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாயுத் தொல்லை போன்றவற்றை தடுப்பதும் இந்த கீரையின் இயல்பாகும். நரம்பு தளர்ச்சியையும் போக்குகிறது. சளி, இருமல், கபம் உள்ளவர்கள் இந்த கீரையுடன் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.
இதனை சாம்பாராகவும் வைப்பர். இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.
நோயற்ற வாழ்விற்கு நாடுவோம் அரைக் கீரை.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum