Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை பிரம்மோத்ஸவம்

View previous topic View next topic Go down

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை பிரம்மோத்ஸவம்

Post  oviya on Sun Mar 24, 2013 7:13 pm

திருமலா திருமலை தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீ பத்மாவதி தாயார் திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோத்ஸவம். வரும் 10ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த வருடம் முதல் இந்த பிரம்மோத்ஸவம் காலத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10.11.12 அன்று காலை த்வஜாரோஹணம் காலை 8.35 முதல் 8.50 வரையும், மாலை சின்ன சேஷவாகனம் இரவு 8 மணிமுதல் 10 ம்ணிவரையும்,
11.11.12 அன்று காலை பெரிய சேஷ வாகனம் 8 மணிமுதல் 9.30 வரையும், மாலை ஹம்ச வாகனம் 8 மணிமுதல் 10 மணிவரையும்,
12.11.12 அன்று காலை முத்துப்பந்தல் வாகனம் 8மணிமுதல் 9.30 வரையிலும் மாலை சிம்ம வாகனம் 8 மணிமுதல் 10 மணிவரையிலும், 13.11.12 அன்று காலை கல்பவிருஷவாகனம் 8 மணிமுதல் 9.30 வரையிலும் , மாலை ஹனுமந்த வாகனம் 8 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும்,
14.11.12 அன்று காலை பல்லக்கு உத்ஸவம் 8 மணிமுதல் 9.30 வரையிலும், மாலை வசந்தோசவம் 4 மணிமுதல் 5 வரையிலும் இரவு யானை வாகனம் 8.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும்,
15.11.12 அன்று காலை சர்வபூபால வாகனம், மாலை சுவர்ணரத்தினம் 4.30 மணிமுதல் 5.30 வரையிலும், இரவு கருட வாகனம் 8.30 முதல் 10.30 வரையிலும்,
16.11.12 அன்று சூர்யப்ரபை வாகனம் காலை 8 மணிமுதல் 9.30 வரையிலும், இரவு சந்திரப்ரபை வாகனம் 8 மணிமுதல் 10 மணிவரையிலும் , 17.11.12 அன்று காலை ரதோத்ஸவம் 7.30 மணிமுதல் 8.30 வரையிலும், மாலை குதிரை வாகனம் 8 மணிமுதல் 10 மணிவரையிலும்
18.11.12 அன்று பல்லக்கு உத்ஸவம் காலை 7.30 முதல் 8 வரையிலும் அதை தொடர்ந்து பஞ்சமி தீர்த்தம் 11.45 முதல் 12 மணிவரை யிலும், 19.11.12 அன்று மாலை புஷ்பவாகனம் 5 மணிமுதல் 7மணிவரை நடைபெறுகிறது. மேலும் தினமும் மாலை அஸ்தன மண்டபத்தில் ஊஞ்சல் சேவா நடைபெறுகிறது.
இந்த வருடம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிரது. பக்தர்களின் பாதுகாப்புக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் எமர்ஜென்ஸி தொடர்புக்கு 08772277777 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் . பக்தக்கோடிகள் இவ்விழாவில் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெறுக.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum