Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


தேவதாயின் அற்புதம்

Go down

தேவதாயின் அற்புதம்

Post  oviya on Sun Mar 24, 2013 7:29 pm

தேவதாய் சம்மனசுகளுக்கு இராக்கினியாக வேண்டியதால் சம்மனசுகளை உண்டாக்கிய ஞாயிறு தினத்திலேயே முழு நிறைவாக அவளுடைய திருச்சரீரம் செய்யப்பட்டது. அடுத்து வந்த சனிக்கிழமை இறைவன் அச் சரீரத்துக்குள் மனித வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆச்சரியமான ஓர் ஆத்துமத்தைச் செய்து அதில் விட்டார்(இதனாலேயே சனிக்கிழமை தேவ தாயாருக்கான நாளாக ஒதுக்கப்பட்டது.)ஞான வரப்பிரசாதங்களினாலும், தூய வரங்களினாலும் நிறைந்த அவ்வாத்துமத்தை சரீரத்தில் புகவிடும்போது மூவொரு இறைவன் “நமது சாயலாகவும், இணையாகவும் மனிதனைச் செய்வோம்” என்றார்.
சிறிது நேரத்தின் பின்பு இத்துணை ஆச்சரியமான படைப்பின் பேரில் தமக்கு இருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க “மிகவும் நேர்த்தியாயிருக்கிறது” என்றார்.இக் கணத்திலே அன்னம்மாள் மனமறிய ஆச்சரியமானதும் அவளோடு தங்கியதுமான இறை வரங்களை பெற்றதனால் ஆனந்தநிலைக்குள்ளாகி இறைவனோடு இணைந்தது போன்று பேரின்பப் பரவசமானாள்.இத் திருப்பொருளைத் தமது பரிசுத்த வயிற்றிலே தாங்கியிருந்த நாட்களில் மோட்சானந்தத்தில் அமிழ்ந்தவள் போல் இருந்தாள்.
வயிற்றில் இருந்த திருக்குழந்தை பூரண அறிவோடு சகல இலட்சணங்களையும் புனிதர்களின் கூட்டம் கொண்டிருந்ததற்கு அதிகமான அருள் யோகங்களையும் கொண்டிருந்தமையால் வயிற்றில் இருந்து கொண்டே தன்னை உண்டாக்கிய இறைவனுக்கு நாதம் பொருந்திய துதிகளைச் செய்து கொண்டு வந்தாள்.ஆரம்பத்திலேயே இறை விசுவாசம், நம்பிக்கை, தேவ சினேகம் என்னும் புண்ணியங்களை செய்துக் கொண்டு வந்தாள்.
உன்னத நன்மையாகிய இறைவனுடைய அழகைக் கண்டு உள்ளம் பூரித்து, பக்திமயமான அன்பைப் பார்க்கிலும் அதிக சோபனம் பொருந்திய பேரன்போடு இறைவனை நேசித்தாள். இறைவன் எப்படி இருக்கிறாரோ அப்படியே அறிந்திருந்தாள். தனக்குச் செய்த நாவுக்கெட்டாத உபகாரங்களுக்காக நன்றித்துதி செய்துக் கொண்டு வந்தாள்.வயிற்றிலிருக்கும் போதே இறைவன் சம்மனசுகளைச் சிருஷ்டித்ததையும் அவைகளில் சிலதும் ஆதி மனிதனான ஆதாமும் விழுந்து போனதையும் அவர்கள் கொண்ட கடும் துன்ப வேதனைகளையும் பாதாள ஸ்தலங்களாகிய உத்தரிப்பு ஸ்தலம், பிதாப்பிதாக்கள் ஸ்தலம்,நரகஸ்தலம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தாள்.
அன்றியும் சகல மனிதர்களையும் சகல சம்மனசுகளையும் அவர்களின் கிராமங்களையும், கிரியைகளையும், ஏனைய படைப்புக்களின் குணாதிசயங்களையும் அவள் கண்டிருந்தாள். பண்டைய குடும்பங்களும், தீர்க்கதரிசிகள் கொண்டிருந்த வரங்களும் அவளுக்குத் தெரிந்திருந்தன. ஆதி மனிதனான ஆதாம் பாவத்தில் விழுந்ததை எண்ணி மனங்கலங்கி அவள் சிந்திய கண்ணீரை பிராயச்சித்த கண்ணீராக இறைவன் ஏற்றுக்கொண்டார். தான் இறைவனூடாகப் பார்க்கின்ற தன் பெற்றோருக்காக வேண்டிக்கொண்டாள். வயிற்றிலிருக்கும் போது மூன்று முறை இறைவனின் காட்சியைக் கண்டாள்.அவை ஆத்துமம் சிருஷ்டிக்கப்பட்ட போது ஒரு ஒரு முறையும், ஒன்பதாம் மாதத்தில் ஒரு முறையும், தான் பிறப்பதற்கு முந்திய நாளில் ஒரு முறையும் ஆகும்.
மனுக்குலம் ஈடேற்றம் அடைய வேண்டிக்கொள்வாள். தான் உலகில் பிறந்து இறைவனுக்கு ஒரு துளி கூட விரோதம் செய்ய நேரிடுமெனில்தான் வயிற்றிலேயே மரிக்க வேண்டிக்கொண்டாள்.அந்தக் கணத்திலேயே பூமியில் இறங்கும் படி சித்தம் உண்டாயிற்று.புனித அன்னம்மாளிடத்தில் வெளிப்படையாய் நடக்கும் அற்புத நிகழ்வுகளைக் கண்ட பசாசு தன் தலையை நசுக்கப் போகின்ற பெண் இவள் வயிற்றில் இருக்கக் கூடுமென எண்ணி, இதனால் அன்னம்மாளுக்கு இம்சை பொருந்திய தந்திரங்களைச் செய்வதற்காக அவளைக் கொல்ல அவளின் வீட்டை இடிக்க முயற்சித்த போது சம்மனசுகள் அதைத் தடுத்து நிறுத்தினார்கள்.சில வாயாடிப் பெண்களை ஏவி அவள் மேல் கொடுமையான தீயவார்த்தைகளைப் பிரயோகிக்கச் செய்தது. வரப்பிரசாதங்களால் அலங்கரிக்கப்பட்ட புனித அன்னம்மாள் விசுவாசத்தில் நிலைத்து அசையாது மலை போன்று நின்றாள்.
avatar
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum