Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து

View previous topic View next topic Go down

கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து

Post  ishwarya on Wed Mar 27, 2013 12:38 pm

பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது: நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது. போதை வெறியில் இருப்பவர்களால்தான் பல கொடூர செயல்கள் நடக்கின்றன. கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகையிலை பழக்கங்களும் இதுபோன்றதே. இவை சமூகத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் பற்றாக்குறை, மயக்கம், ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற பல பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படக்கூடும்.

மதுவில் இருக்கும் எத்தனால் என்ற வேதிப்பொருள்தான் இத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மதுபோதையில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை போக்க முடியும். போதை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து மீட்பதற்காக, நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஆரோக்கியம் தரும் புகையிலையை உருவாக்கியுள்ளேன். இதில் நிக்கோடின் இருக்காது. இந்த புகையிலை ஆரோக்கியம் தரக்கூடியது. இதுபோல, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ் மருந்து’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ரத்த கட்டிகள், டெர்மாய்டு சிஸ்ட், பெல்விக் இன்பிளமேஷன் நோய்கள் ஆகியவற்றை ஆபரேஷன் இல்லாமலே இந்த மருந்து மூலம் குணமாக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum