Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

Go down

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

Post  ishwarya on Wed Mar 27, 2013 12:50 pm

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி. வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.

உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.

ரெசிபி

குகும்பர் ரய்தா: வெள்ளரி கால் கிலோ துருவிக் கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப், துருவிய கேரட் அரைக்கப். பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்ப அதிகரிப்பைத் தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

சின்ன வெங்காயக் குழம்பு: சின்ன வெங்காயம் கால்கிலோ உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசல் ஒரு கப். வரமிளகாய் இரண்டு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து குழம்புபதத்துக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சின்ன வெங்காயத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

சிக்கன் ஆம்லெட்: 50 கிராம் சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண் ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித் துக் கொள்ளவும். இரண்டு முட்டையில் அரை டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை அரை கப், எலுமிச்சை சாறு ஒரு துளி, வெங்காயம் நறுக்கியது அரை கப், பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும். முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம். இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக் கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

டயட்
.
“தி னமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம்.

ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

* கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
* கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
* ஐந்து கிராம்பு மற்றும் 20 சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
* குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
* சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
* சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum