Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வாலீஸ்வரர் கோயில், குரங்கணில் முட்டம்

Go down

வாலீஸ்வரர் கோயில், குரங்கணில் முட்டம்

Post  birundha on Sun Mar 31, 2013 2:39 pm

ஸ்தல வரலாறு.......

நினைத்தாலே முக்தியை தரும் அருணாசலேலஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இந்த திருத்தலம் திருவண்ணாமலையில் உள்ளது. இதே போல் முக்தியை வழங்கும் மற்றொரு பிறவாத் தலமும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி யில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தூசி என்ற கிராமம். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரங்கணில் முட்டம். இந்த திருத்தலத்தில் உள்ள வாலீஸ்வரர் தான் முக்தியை அருளும் ஒப்பற்ற இறைவனாக வீற்றிருக்கிறார்.

எமனுக்கு ஏற்பட்ட சாபம்.........

16வது வயதில் இறப்பு என்ற நிலையில் பிறந்தவர் மார்க்கண்டேயர். இவர் தனது இறுதி நாள் நெருங்கி விட்டதை அடுத்து, சிவதல யாத்திரை மேற்கொண்டார். திருக்கடவூர் தலத்தில் சிவனை தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, மார்க்கண்டேயரின் இறப்பு நாள் வந்தது. அப்போது அங்கு வந்த எமதர்மன், பாசக்கயிற்றை மார்க்கண்டேயரை நோக்கி வீசினார்.

அதைப் பார்த்ததும் மார்க்கண்டேயர், வாலியின் தோற்றம் சிவலிங்கத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். பாசக்கயிறு சிவபெருமானையும் சேர்த்து இழுத்தது. அப்போது சிவபெருமான் வெளிப்பட்டு, எமனை தனது காலால் எட்டி உதைத்தார். தனது பக்தனின் உயிரை பறிக்க வந்த எமனின் பதவியை பறித்தார் சிவபெருமான். இதையடுத்து எமதர்மன், சிவபெருமானை வணங்கி தனது தவறை மன்னித்தருள வேண்டினார்.

குரங்கணில் முட்டம்.........

மனம் இறங்கிய ஈசன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தனது தரிசனம் கிடைக்கப்பெற்று, அதன் மூலமாக இழந்த பதவி கிடைக்கும் என்று கூறினார். அதன்படி பூலோகம் சென்ற எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வந்தார்.

அப்போது கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால், உடல் முழுவதும் கண்களாக மாறப்பெற்ற இந்திரனும், பூலோகத்தில் சிவதலங்களை தரிசித்து வந்தார். பின்னர் காகம் உருவில் இருந்த எமனும், அணில் உருவில் இந்திரனும் குறிப்பிட்ட தலத்திற்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையில் சிறந்த சிவபக்தனான வாலியும் இந்த தலத்திற்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் மூவரும் சேர்ந்து இத்தல இறைவனை தரிசனம் செய்தனர். இதனால் எமதர்மனும், இந்திரனும் சாபவிமோசனம் பெற்றனர். மூவருக்கும் காட்சி தந்தார் சிவபெருமான். பின்னர் அவர்களின் வேண்டுதலுக்காக அங்கு சுயம்புவாக எழுந்தருளினார். மூவரும் வழிபட்டதால் இந்த தலம் குரங்கு அணில் முட்டம் என்றானது.

வாலீஸ்வரர்.........

இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன், மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னிதியில், இறையார்வளையம்மை என்ற பெயருடன் அருளாசி வழங்குகிறார்.

வாலி, இந்திரன், எமன் மூவரும் சிவனை வணங்குவதற்கு முன்பாக, அம்பாளை தரிசனம் செய்ததாகவும், அம்பாள் சிவபெருமானிடம் மூவருக்கும் அருள்புரியும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இரு கைகளிலும் வளையல் அணிந்து மகிழ்ந்த முகத்துடன் அம்பாள் காட்சி தருகிறார். திருமணமான பெண்கள், கர்ப்பிணிகள் இந்த அம்மனுக்கு வளையல் அணிவித்து, பின்னர் அதனை அணிந்து கொள்கின்றனர்.

இதனால் விரைவில் குழந்தைப்பேறு, சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த கோவில் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் இறைவனின் மீது சூரிய ஒளி விழுகிறது. சூரிய ஒளியில் சிவலிங்கம் ஜொலிப்பதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாகும்.

குரங்கு வடிவில் வந்த வாலி சிவனை வணங்கிய போது அவருக்கு பூஜை செய்வதற்காக கையால் மலர்களை பறிக்காமல், மரத்தை உலுக்கி பூஜித்துள்ளார். இதனால் 'கொய்யா மலர் நாதர்' (பறிக்கப்படாத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற சிறப்பு பெயராலும் சிவன் வணங்கப்படுகிறார்.

கரும்புச்சாறு அபிஷேகம்.............

இந்த தலத்தில் விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையார் இருக்கிறது. இது விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்று கூறுகிறார்கள். வலது கையில் பிரயோக சக்கரம், இடது கையில் சக்கர முத்திரையுடன் சாந்தமான முகத்தோடு, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். கோவில் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், சப்தமாதர், நாக தேவதை, நவக்கிர கங்களும், கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருகிறார்கள்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum