Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கொனார்க் சூரியன் கோவில்

View previous topic View next topic Go down

கொனார்க் சூரியன் கோவில்

Post  birundha on Sun Mar 31, 2013 3:32 pm

ஸ்தல வரலாறு....

கொனார்க் சூரியன் கோவில் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இக்கோவில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம் சூரியன் கோவிலின் சிறப்பு மிக்க கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

"இங்கு கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது'' என்று வியந்து கூறியிருக்கிறார். மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தது. போன்று பலரையும் கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள், வியப்படைய வைத்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் பிளாக் பகோடா கறுப்பு கோவில் அகும்.

பதின் மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி. 1236-1264) கங்கப் பேரரசின் 12ஆண்டு வருமானம் இக்கோவிலைகட்ட செலவிடப்பட்டதாம். இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். இங்குள்ள மக்கள் எந்த ஒரு காரியங்களையும் செய்யும் முன் சூரியனை வழிப்பட்டபின்புதான் தொடங்குவார்கள்.

இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம் அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள் நடனமாடும் மங்கையர். குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முழுப்பகுதி இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குத் குறையவில்லை.

சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியகத்தில் காணலாம். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக்கோவிலை யுனெஸ்கோ அமைப்பு உலகப்பண்பாட்டுச்சின்னமாக 1984-ம் ஆண்டில் அறிவித்தது.

இக்கோவில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் மஹாசப்தமி விழா பிரசித்தம் டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத்திருவிழா இது. புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது.

முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் இருந்தும் ரெயில் மூலமாக வந்து சேரலாம். அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு வழிபாடுட்டு சுற்றுலாத்தலமாகும்.

போக்குவரத்து வசதி.....

சென்னையில் இருந்து ரெயில் மூலம் ஒரிசா மாநிலம் வரவேண்டும். இந்த ரெயில் நிலையத்திலிருந்து பஸ் வசதியும் உள்ளது. ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவுக் கட்டணம் ரூ.465 ஆகும்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum