Related Posts Plugin for WordPress, Blogger...

மருந்து விஞ்ஞானிகளுக்கு குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு…

View previous topic View next topic Go down

மருந்து விஞ்ஞானிகளுக்கு குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு…

Post  amma on Fri Apr 05, 2013 11:58 am

தற்போதைய வாழ்க்கை முறையால், புதிது புதிதாக நோய்கள் தோன்றி வருகின்றன. ஆட்கொல்லி நோய்களின் படையெடுப்பும் அதிகமாக உள்ளது. மறுபுறத்தில் நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளின் எண்ணிக்கையும் உலகளவில் அதி கரித்த வண்ணம் உள்ளது. இந்த கம்பெனிகளில் பல்வேறு நிலைகளில் பணியாளர்களின் தேவையும் மிகுதியாக உள்ளது.

நோய்களுக்கு முக்கிய காரணங்களாக விளங்கு பவை தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப்பொருள்கள் மற்றும் ஆபத்தான கதிர்வீச்சு. இவற்றால் மனிதனுக்கு, விலங்குகளுக்கு, சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி டாக்சிகாலஜியில் படிக்கலாம். பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும் ஆராய முடியும். இது பார்மசியில் ஒரு பிரிவாக உள்ளது. பார்மசி படித்தவர்கள் மேற்படிப்பாக இதனை படித்தால் வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும். இதில் உயிரியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பார்மாக்காலாஜி, கணிதம், பேத்தாலஜி, இம்யுனாலஜி மற்றும் ஜெனிடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.

டாக்சிகாலஜி படித்தோருக்கு ஏராளமான நிறுவனங்கள் நல்ல ஊதியத்துடன் பணிவாய்ப்புகளை அளிக்க காத்துக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தரம் பிரித்து மருத்துவ ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிக்கு ஆள்கள் தேவை அதிகம் உள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் புதிய மருந்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாகவும் சேரலாம். பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி மய்யங்களிலும் டாக்சிகாலாஜி சம்பந்தமான துறைகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும். குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் ஆய்வுத் துறையில் சேரலாம். மருத்துவமனைகளிலும் சேர்ந்து பணியாற்றலாம். பயோடெக்னாலஜி நிறுவனங்களிலும், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களிலும் பணிவாய்ப்பினை பெறலாம். அரசுத் துறைகளில்கூட இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum