Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின்களும்விஷம்தான்!

Go down

அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின்களும்விஷம்தான்!

Post  amma on Fri Apr 05, 2013 12:57 pm

நம் உடல் நலத்தில் வைட்டமின்கள் பங்கு மிகமுக்கியம் என்பது யாவரும் அறிந்த ஓன்று. இருப்பினும் வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவுதெரிவிக்கிறது.

50 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 38000 அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சை முறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும், உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.

இவ்வாறு தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் வாழ்நாள் அவர்களை போன்ற மற்றவர்களின் வாழ்நாளோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை ஆய்வாளகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து உடல்நலத்துடன் இருப்பவர்கள் தங்களின் நலத்தினை மேலும் அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை எடுத்துக்கொள்வது தேவையற்றது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். மருத்துவரின் உரிய ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum