Related Posts Plugin for WordPress, Blogger...

கதிரவனை சுற்றி ஏற்பட்ட அதிசய கருப்பு வளையம்! காணொளி இணைப்பு

View previous topic View next topic Go down

கதிரவனை சுற்றி ஏற்பட்ட அதிசய கருப்பு வளையம்! காணொளி இணைப்பு

Post  amma on Fri Apr 05, 2013 1:37 pm

இன்று முற்பகல் 11 மணியளவில் விண்ணில் தகதகத்த கதிரவனை சுற்றி மிக பிரமாண்டமான ஒரு கருப்பு வளையம் ஓன்று தோன்றியது. இந்த காட்சியினை கோவை, திருப்பூர், உடுமலை மற்றும் பொழில்வாய்ச்சி(பொள்ளாச்சி) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் கண்டுகளித்தனர். கோவை பகுதியில் பிற்பகல் 2 .30 மணிவரை இந்த காட்சி விண்ணில் தெரிந்தது. அந்த ஒளிவட்டத்தின் விளிம்பில் வானவில்லின் ஏழு நிறங்களும் தெரிந்தன. வெறும் கண்ணால் காணமுடியாத இந்த காட்சியினை பலர் கறுப்புகண்ணாடி அணித்து கண்டு ரசித்தனர்.

இது குறித்து தமிழக தென்மண்டல அறிவியல் வல்லுநர் அய்யம்பெருமாள் கூறியதாவது: “காற்றில் ஈரப்பதம் மிகுதியானதால் நீர்த்துளிகள் விலகி ஒளிவட்டம் ஏற்பட்டுள்ளது. கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மேகமூட்டம் மிகுதியாக இருப்பதால் ஒளிவட்டம் தெளிவாக தெரிந்தது. இது முப்பரிமான முறையில் காணப்பட்டது. வெறும் கண்களால் இதனை பார்க்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது.

அறிவியலில் இந்த நிகழ்விற்கு சன் ஹொலோ என்று பெயர். இது வழக்கமாக தெரியக்கூடியதுதான். மேகமூட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum