Related Posts Plugin for WordPress, Blogger...

தனியார் தொலைக்காட்சிகளின் ஏலத்தொகையை திறக்கத் தடை சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

View previous topic View next topic Go down

தனியார் தொலைக்காட்சிகளின் ஏலத்தொகையை திறக்கத் தடை சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

Post  amma on Fri Apr 05, 2013 2:01 pm

அரசு கேபிளில் அலை வரிசை ஒதுக்குவதற்கான டெண்டரில் தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பிட்டுள்ள ஏலத்தொகையை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மக்கள் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, இமயம் தொலைக் காட்சி,கேப்டன் தொலைக்காட்சி, உட்பட 13 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன.

மக்கள் தொலைக் காட்சி நிறுவனம் தாக் கல் செய்துள்ள மனு வில் கூறப்பட்டு இருந்த தாவது:-

தனியார் தொலைக் காட்சி அலைவரிசை களுக்கு அரசு கேபிள் அலை வரிசையில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும், ஒளிபரப்பு சேவைக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் டெண்டர் அறிவிப்பை 28.6.12 அன்று அரசு கேபிள் தொலைக் காட்சி கழகம் வெளி யிட்டது.

சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களிலும் டெண்டர் மூலம் அலை வரிசை ஒதுக்கீடு செய்யப் பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் 17ஆம் தேதியன்று திறக்கப்படுகின்றன. இதன் மூலம், இலவச சேனல்களும்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் இதுவரை இலவசமாக பெற்று வந்த சேனல்கள், கட்டணங்களை செலுத்திப் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

இலவச அலைவரிசைகள் அனைத்தும் அரசுக்கு கட்டணம் செலுத்துவதோடு, பார்வையாளர்களிடம்இருந்து பணத்தை வசூலிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். இதனால் இலவச அலை வரிசைகளின் நிலை மோசமாகிவிடும்.

டெண்டர் முறைகளுக்கும், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்துக்கும் முரணாக வெளியிடப்பட்ட இந்த டெண்டரை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, `17ஆம் தேதி அல்லது வேறு தேதிகளில் நடக்க இருக்கும் ஏல நடவடிக்கை மூலம், சேனல் களுக்கு அலைவரிசையில் ஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

டெண்டரை தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பு 18ஆம் தேதி காலை 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த அவகாசம், மனுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.மற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

இந்த டெண்டரில் ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்கும் வகையில் தங்களுக்கான விலைப்புள்ளியை குறிப்பிட்டு இருக்கின்றனர். அதை திறக்க அனுமதித்தால், தகவல்கள்அனைத்தும் வெளியே தெரிந்துவிடும்.

இது அரசு கேபிள் தொலைக்காட்சி கழகத்துக்கு உகந்ததாக இருக்காது. எனவே மறு உத்தரவு வரும்வரை ஏலத்துக்கான விலைப்புள்ளியை திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை 9.8.12 தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

_________________

amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum