Related Posts Plugin for WordPress, Blogger...

“இலங்கைத் தூதுவரை நாடு கடத்த வேண்டும்” ஆஸ்திரேலிய பசுமை கட்சி கோரிக்கை

View previous topic View next topic Go down

“இலங்கைத் தூதுவரை நாடு கடத்த வேண்டும்” ஆஸ்திரேலிய பசுமை கட்சி கோரிக்கை

Post  amma on Fri Apr 05, 2013 2:07 pm

ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதர் திசர சமரசிங்கவை நாடு கடத்த வேண்டுமென அந்நாட்டு பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியன்னன் கருத்துத் தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் கூறுகையில்:

“இவர் மீது போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடந்த காலகட்டத்தில் திசர சமரசிங்க, இலங்கைக் கடற்படையினருக்கு தலைமை தாங்கினார். இலங்கைக் கடற்படையினருக்கு தலைமை தாங்கிய திசர சமரசிங்கவிற்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை.” என்று தெரிவித்தார்.

அதே சமயம் திசர சமரசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே திசர சமரசிங்கவிற்கு எதிரான விசாரணைகள் முற்று பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

“ஆஸ்திரேலியா பசுமை கட்சி ஒரு சிறுபான்மை கட்சி எனவும், அந்தக் கட்சியின் கருத்துக்கள் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் கருத்தாக அமையாது” என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பொக்கார் தெரிவித்துள்ளார்.

பசுமை கட்சியின் இந்த கருத்து குறித்து ஆஸ்திரேலியா ஊடகங்களிலும் அங்குள்ள மக்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum