Related Posts Plugin for WordPress, Blogger...

மர வகை

View previous topic View next topic Go down

மர வகை

Post  amma on Tue Apr 09, 2013 5:03 pm


சந்தன மரம்:

சாதி சந்தன மரக்கட்டையை கிரமப்படி அனுபவிப்பவர்களுக்கு நல்ல விவேகமும் மன மகிழ்ச்சியும், லட்சுமி கடாட்சமும், சரும அழகும், மாதர் இச்சையும் உண்டாகும். சீழ் பிரமியம் நீங்கும்.

தேவதாரு மரம்:

இதை தேவதாரம் என்றும் கூறுவர். தேவதாரு கட்டையானது நாசி ரோகம், பழைய சுரம், ஜலதோசம், சரீர வெப்பம் ஆகியவை நீக்கும்.

சரள தேவதாரு மரம்:

சரள தேவதாரு கட்டையினால் சிலேஷ்ம தோஷம், தந்த நோய், இரைப்பு, ஐவகை வலி, கர்ணநாத ரோகம், நடுக்கு வாதம், கபச்சுரம் ஆகியவை நீங்கும்.

அகில் மரம்:

அகில் கட்டையானது முதுமையானவர்களுடைய தளர்ந்த தேகத்தை இறுக்கும் இதன் மணத்தால் சில சுரம் நீங்கும். இதன் புகையால் வாந்தியும், அயர்ச்சியும், அருசியும் நீங்கும்.

அகரு மரம்:

அகரு கட்டையால் பீனிசம், தலைக்குத்து, வாதம் தினவுள்ள புடைகள் ஆகியவை நீங்கும்.

சரக்கொன்றை மரம்:

சரக்கொன்றை மரத்தால் பெரு வியாதி, கிருமி நோய், சூலை, வாதம், கபம், விஷ மலம், அரோசகம் ஆகியவை அகலும். இதில் துவர்ப்பு உண்டு. விரோசனம் ஆகும்.

சிறுகொன்றை மரம்:

அதிகமாக கசப்புடைய சிறுக்கொன்றை மரத்தால் கபால சூட்டினால் தோன்றும் நேத்திர நோய்களும், தேக உஷ்ணமும், உள் மூலமும் நீங்கும். உடல் வலிமையும், அழகும் உண்டாகும்.

நரிக்கொன்றை மரம்:

இதனால் யானை சொறியும், தவிட்டு கிருமி புடையும், தினவுள்ள விரணப்புடையும் நீங்கும்.

மைக்கொன்றை மரம்:

இதனால் குடை விருத்தி, வாயு, சூலை, மேக நோய்கள் ஆகியவை நீங்கும்.

மருத மரம்:

மருத மரமானது நீரிழிவு, பிரமியம், மயக்கம், தாகம், நீங்காத சுரத்தினால் வரும் ஆயாசம், பெருவியாதி, கிருமி நோய், உதர நோய், வறட்சூலை ஆகியவை விலக செய்யும்.

வேங்கை மரம்:

வேங்கை மரத்தினால் குற்றிருமல், வெள்ளை விழுதல், உள்மாந்தை, விரணம், காசம், சீழ் பிரமேகம் ஆகியவை நீங்கும். கண்ணுக்கு ஒளியும் மல விரோசனமும் உண்டாகும்.

வன்னி மரம்:

வெப்பத்தையுடைய வன்னி மரத்துக்கு வாத சந்நி பாதம், திரிதோஷம், சிலேஷ்ம கோபம், புடை இவை அனைத்தும் நீங்கும்.

புரச மரம்:

புரச மரமானது வாதாதிக்கம், பித்த கோபம், சிலேஷ்ம தோஷம், வயிற்று நோய், மலக்கிருமி, கிராணி ரோகம், தேகக்குடைச்சல் ஆகியவற்றை நீக்கும். உதராக்கினியை உண்டாக்கும்.

காட்டாத்தி மரம்:

அதிசார பேதி, அக்கினி மாந்தம், இருமல், தாவர சங்கம் விஷம் ஆகியவை போகும்.

இருவாட்சி மரம்:

உஷ்ணமும், கார்ப்பு சுவையும் நிறைந்த இருவாட்சி மரத்தினால் நேத்திர ஒளியும், தேகத்தில் நல்ல வாசனையும், வனப்பும் உண்டாகும். தேக குத்தலும், மூர்ச்சை நோயும் நீங்கும்.

பெருக்குமிழ மரம்:

மதுமேக எரிச்சல், வெள்ளை விழுதல், நீர்க்கடுப்பு, பித்த சுரம், வாத சுரம், திரி தோஷம் ஆகியவை போகும்.

மாவிலிங்க மரம்:

சுரம், கடிகளின் தோஷம், மகா வாத ரோகங்கள், சர்ப்ப விஷம் ஆகியவை நீங்கும்.

கடல் அழிஞ்சில் மரம்:

மது நீர், வாத பித்த கபம் ஆகிய மூன்று தோஷங்களினால் உண்டான நீர்ப்போக்குகள், தாகத்தை தருகின்ற தொந்த நீர்ப்போக்குகள், படர்தாமரை, சொட்டு மூத்திரம், தனிச்சுரம், அதிசாரம், சீதமேகம் ஆகியவற்றை போக்கும்.

கொழுக்கட்டை மரம்:

மோதக வல்லி மரம் என்னும் கொழுக்கட்டை மரத்தினால் அசிர்க்கரமும், வாதத்தினால் மூலாக்கினி தள்ள விழுகின்ற இரத்த சீதமும் நீங்கும்.

அழிஞ்சில் மரம்:

அழிஞ்சில் மரத்தினால் வாத கோபம், கப தோஷம், சீழ் வடியும் பெரு நோய் ஆகியவை நீங்கும். பித்தாதிக்கத்தை உண்டாக்கும்.

பூத மரம்:

பூத விருட்சம் என்னும் ஆல மரத்தால் பல விதமான விஷம், வாத ரோகங்கள், சந்நி பாதங்கள் ஆகியவை விலகும்.

வாகை மரம்:

கார்ப்பும், கைப்பும் உள்ள வாகை மரம் ஜடராக்கினியை விருத்தி செய்யும். சர்ப்ப விஷங்கள், பித்த விரணங்கள், வாத சொறி, தாக சுரம், கந்ததாளி ரோகங்கள் ஆகியவற்றை நீக்கும்.

கருவாகை மரம்:

புண், வெப்பம், வாத கோபம், சன்னிக்கிருமி ஆகியவை போகும்.

இலவ மரம்:

உஷ்ணமுள்ள இலவ மரத்தினால் வாத கிரிச்சரம், எரிமூத்திரம், தந்நு மேகம் ஆகியவை அகலும். சுக்கிலமும், ரச தாதுவும் பலப்படும்.

முள் இலவ மரம்:

பஞ்சு நூலை போல் வீழ்கின்ற தந்து மேகத்தையும், மூத்திர நாளச்சூட்டையும், வாதாதி சாரத்தையும் போக்கும்.

விளா மரம்:

கபித்தம் என்னும் விளா மரத்தினால் இருமல், இரைப்பு, அரோசகம், தாகம், பித்த கப ரோகம் ஆகியவை போகும்.

கருநெல்லி மரம்:

பதினைந்து வகை சந்நி பாதங்கள், மயக்கம், மனோ வியாதி ஆகியவை நீங்கும். காயசித்தி ஆகும்.

அருள் மரம்:

அருள் என்னும் முதிர்ந்த மாது மரத்தினால் வாத கோபம், மந்தாக்கினி, சீத ரத்த பேதி, சுர வீக்கம் ஆகியவை போகும்.

வேப்ப மரம்:

சுரம், வாத கோபம், மூல கண மாந்தம், எரிகிருமி, வயிற்று நோய், சிதறுகின்ற மலப்பேதி இவை நீங்கும்.

மலை வேப்ப மரம்:

மலை வேப்ப மரத்துக்கு மலட்டு கிருமி, இரத்த குன்ம ரோகம், ஓடி ஓடி குத்துகின்ற வாதம் ஆகியவை விலகும்.

சருக்கரை வேப்ப மரம்:

இலையில் மதுரமுள்ள சருக்கரை வேம்பினால் காய சித்தியும், சுக்கில சுரோணித சுத்தியும் உண்டாகும். கப ரோகம் நீங்கும்.

பாலை மரம்:

பாலை மரத்துக்கு வாத நோய் கூட்டங்கள், பித்த ரோமம், தமக சுவாசம், திரி தோஷம் ஆகியவை ஒழியும்.

வெட்பாலை மரம்:

வெப்ப குணமுடைய வெட்பாலை மரமானது வாத வலியையும், திரி தோஷ கோபத்தையும் நீக்கும்.

தீம் பாலை மரம்:

தித்திப்பு குணம் உள்ள தீம்பாலை மரத்துக்கு மேக உஷ்ண வெள்ளை, சந்நி விஷ பாகம், கண் நோய், தாகம், திரி தோஷம், வாந்தி, பித்த கோபம், நீரேற்றம், நாசி நோய், இரத்தக்கிராணி ஆகியவை நீங்கும்.

மலைப்பாலை மரம்:

மலைப்பாலை மரத்துக்கு விக்கல், ஐவகை வலி, வாந்தி, வயிற்று வலி, விலாக்குத்தல், கருங்கரப்பான், மந்தாக்கினி ஆகியவை விலகும்.

குடசப்பாலை மரம்:

குடசப்பாலை மரத்துக்கு அதிசாரம், வாத நோய், நீரிழிவு, தந்தி பிரமேகம், மிக கொடிதாக பொங்கும்கரப்பான், சிரங்கு ஆகியவை நீங்கும்.

குளப்பாலை மரம்:

பலமுள்ள குளப்பாலை மரத்துக்கு சுவாசகாசம், பக்க சூலை, அதிசார வியர்வை, சுரம், கரப்பான் இவை அகலும்.

முள்முருக்க மரம்:

இதை கலியாண முருக்க மரம் என்றும் கூறுவர். இதனால் வாந்தி, வயிற்று வலி, பித்த சுரம், அக்கரம், அனல் வாய் வேக்காடு ஆகியவை நீங்கும். மிகுந்த வலியையும் உண்டாக்கும்.

ஊழலாற்றி மரம்:

காட்டில் வளருகின்ற ஊழலாற்றி மரத்தினால் மேக விரணம், ஒட்டுப்புண், ஆண் குறி விரணம், பாமை என்னும் சிரங்கு, போகத்தால் வந்த அரையாப்பு, வெள்ளை, கீல் வாதம், பெரு நோய் ஆகியவை நீங்கும்.

வெள்வேல் மரம்:

வெள்வேல் மரத்துக்கு பித்த மயக்கம், வாதம், சந்துக்குடைச்சல், சர்வாங்க வாத ரோகம் ஆகியவை நீங்கும்.

மூங்கில் மரம்:

மலையில் ஓங்கி வளர்ந்து இழைகின்ற மூங்கில் மரத்துக்கு, மாதாந்தர ருது சோணித கட்டு, சுரம், வாத நோய், இரைப்பு ஆகியவை அகலும்.

இவை அனைத்தும் மர வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum