Related Posts Plugin for WordPress, Blogger...

ஜவ்வரிசி வடை

View previous topic View next topic Go down

ஜவ்வரிசி வடை

Post  ishwarya on Fri Apr 12, 2013 6:17 pm


தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி = 100கிராம்
வெங்காயம் = 50 கிராம்
மிளகாய் = 3
சீரகம் = 2ஸ்பூன்
பெருங்காயம் = 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை = தேவையான அளவு
அரிசி மாவு = தேவையான அளவு
நல்லெண்ணெய் = தேவையானஅளவு
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை உறவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
உறவைத்த ஜவ்வரிசியுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை,உப்பு ஆகியவற்றை சேர்த்து(தண்ணீர் சேர்க்காமல்) கலக்க‌ வேண்டும்.
பின் வடை பதத்தில் தட்டவேண்டும். பதம் வரவில்லை என்றால் மட்டும் அரிசிமாவை சேர்த்து கலக்க‌ வேண்டும். பின் வடை போன்று தட்டி வைக்க‌ வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் வடையை கடாயில் போட வேண்டும். பொன்னிறமான பிறகு வடையை எடுக்க வேண்டும்.

மருத்துவ குணம்:

ஜவ்வரிசி ஸ்டார்ச், தூய கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் கொண்டிருக்கிறது. மிகவும் கொழுப்பு குறைந்த உணவு. ஜவ்வரிசியின் தன்மை வயிற்று வலி வயிற்றுப்புண் போன்றவற்றை குறைக்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum