Related Posts Plugin for WordPress, Blogger...

கதம்ப குழம்பு

View previous topic View next topic Go down

கதம்ப குழம்பு

Post  ishwarya on Fri Apr 12, 2013 6:24 pm

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு = 100 கிராம்
கடலை மாவு = 100 கிராம்
பச்சை மிளகாய் = 3
சீரகம் = அரை ஸ்பூன்
ஓமம் = அரை ஸ்பூன்
வெங்காயம் = 2
தக்காளி = 2
புளி = எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
தேங்காய் பால் = அரை கப்
கடுகு = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பை 10 நிமிடம் ஊற விட்டு இஞ்சி, சீரகம், ஓமம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். இதையும் கடலை மாவையும் 2 கப் தண்ணீரில் கரைக்கவும். புளியை கரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவும். வதங்கியதும் புளி கரைசலைச் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பொடி வாசனை அடங்கியதும் கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்துத் திறந்து வைத்தே கொதிக்க விடவும்.
இதுவும் சேர்ந்து கொதித்து குழம்பு கெட்டியாக வரும் போது தேங்காய் பால் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும்.

சுவையான கதம்ப குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ், சமோசா, பிரட், அடை, ஆப்பம், பொங்கல், உப்புமா, இட்லி, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum