Related Posts Plugin for WordPress, Blogger...

மங்களுர் ரசம்

View previous topic View next topic Go down

மங்களுர் ரசம்

Post  ishwarya on Sat Apr 13, 2013 11:26 am

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு = 2 கரண்டி
இஞ்சி = காலங்குலம்
பச்சை மிளகாய் = 2
தக்காளி = 2
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
தனியா = 1 ஸ்பூன்
புளி = அரை எலுமிச்சை அளவு
பெருங்காயம் = சிறிதளவு
கடுகு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும்.
மிளகு, சீரகம் உடைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டவும். தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து தக்காளி வதக்கிக் கொண்டு புளித் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகு, சீரகம் சேர்க்கவும்.
கொதிக்கத் துவங்கும் போது ஊறிய பயத்தம் பருப்பு வறுத்த தனியா, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான மங்களுர் ரசம் தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum