Related Posts Plugin for WordPress, Blogger...

உருளைக்கிழங்கு கரம்மசாலா பொடிமாஸ்

View previous topic View next topic Go down

உருளைக்கிழங்கு கரம்மசாலா பொடிமாஸ்

Post  ishwarya on Sat Apr 13, 2013 11:30 am

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு = அரை கிலோ
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 6
இஞ்சி = அரை ஸ்பூன்
அம்சூர் பவுடர் = 1 ஸ்பூன்
தனியா = 2 ஸ்பூன்
கிராம்பு = 4
ஏலக்காய் = 4
சோம்பு =1 ஸ்பூன்
பட்டை = 2 துண்டு
பிரட் கிரம்ப் = 3 ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பட்டை ஆகியவற்றையும் தனியாவையும் நன்றாக வறுத்துப் பொடி செய்யவும். இதையும் உருளைக்கிழங்கோடு சேர்த்துப் பிசறவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் பிசறி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும். கிழங்கு உதிரி உதிரியாக வந்ததும் அம்சூர் பவுடர், பிரட் கிரம்ப் தூவி நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பரிமறவும்.

சுவையான உருளைக்கிழங்கு கரம்மசாலா பொடிமாஸ் தயார். இதை ரைஸ், சப்பாத்தியோடு பரிமாற‌லாம்.
மருத்துவ குணங்கள்:

உருளைக்கிழங்குகள் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum