Related Posts Plugin for WordPress, Blogger...

கொட்டு ரசம்

View previous topic View next topic Go down

கொட்டு ரசம்

Post  ishwarya on Sat Apr 13, 2013 11:36 am

தேவையான பொருள்கள்:

மிளகு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 3
சீரகம் = அரை ஸ்பூன்
புளி = எலுமிச்சை அளவு
கடுகு = அரை ஸ்பூன்
பெருங்காயம் = சிறிதளவு
எண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

புளியை கரைத்து வடிகட்டவும். மிளகு, சீரகம் உப்பு சேர்த்து மிளகாய் வற்றலை கிள்ளி போடவும். இதை கொதிக்க விடவும். கொதிக்க துவங்கி நுரைத்து வரும் போது இறக்கி விடவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து விடவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான கொட்டு ரசம் தயார். இதை ரைஸோடு சாப்பிட சிறப்பாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:

மிளகில் புரதம், ஸ்டார்ச் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. இதனால் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் எளிதில் ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum