Related Posts Plugin for WordPress, Blogger...

மூளி கோஃதா கறி

View previous topic View next topic Go down

மூளி கோஃதா கறி

Post  ishwarya on Sat Apr 13, 2013 11:43 am

தேவையான பொருள்கள்:

முள்ளங்கி = அரை கிலோ
கடலை பருப்பு = 200 கிராம்
பச்சை மிளகாய் = 5
இஞ்சி = காலங்குலம்
சீரகம் = அரை ஸ்பூன்
தேங்காய் = அரை மூடி
பொட்டு கடலை = 4 ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பூண்டு = 10 பல்
பட்டை = 2
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

முள்ளங்கியை துருவிக் கொள்ளவும். இலை பிஞ்சாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கவும். கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற விட்டுக் களைந்து பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
இதனோடு முள்ளங்கியை பிழிந்து எடுத்து கலக்கவும். இந்த கலவை கெட்டியாக இருந்தால் அப்படியே பயன்படுத்தவும். இல்லாவிட்டால் சிறிது பொட்டு கடலையை பொடித்து போட்டுக் கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வெயிட் போடாமல் வேக விட்டுக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய் துருவிக் கொண்டு பொட்டு கடலை ஆகியவற்றை மைய அரைக்கவும். அதனோடு வெங்காயம், பூண்டு சேர்த்து நசநசப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும் இதில் அரைத்த மசாலாவை போட்டு கிளறவும். கிள‌றிய ‌மசாலாவோடு உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்.
பொடி வாசனை அடங்கியதும் இதனோடு வெந்த உருண்டைகளைப் போட்டு கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.

சுவையான மூளி கோஃதா கறி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum