Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு

View previous topic View next topic Go down

வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:01 pm

தேவையான பொருள்கள்:

வெள்ளரிக்காய் = அரை கிலோ
கடலை பருப்பு = 200 கிராம்
மஞ்சள் பொடி = சிறிதளவு
இஞ்சி = சிறிது
மிளகாய் பொடி= அரை ஸ்பூன்
தேங்காய் = கால் மூடி
கசகசா = 2 ஸ்பூன்
தக்காளி = 2
பச்சை மிளகாய் = 2
பட்டை = 2
கிராம்பு = 2
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காய் அரையங்குலத் துண்டுகளாக நறுக்கவும். கடலைப்பருப்பில், மஞ்சள் பொடி நீக்கி தட்டிய இஞ்சி சேர்த்து குக்கரில் வைத்து வெயிட் போடாமல் நெத்தாக வதக்கவும்.
தேங்காய் துருவி, பச்சை மிளகாய், தக்காளி, கசகசாவோடு எண்ணெயில் சிறிது வதக்கி மிக்ஸியில் சதசதப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு அரைத்த தேங்காய் மசாலாவை போட்டு இதனோடு வெள்ளரிக்காய், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து வதக்கி மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
இடையில் ஒரு முறை கிளறி விடவும். திறந்து கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

சுவையான வெள்ளரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum