Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு காரக்கறி

Go down

உருளைக்கிழங்கு காரக்கறி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:08 pm

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு = அரை கிலோ
குடை மிளகாய் = 3
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
இஞ்சி = அரை ஸ்பூன்
தயிர் = அரை கப்
எண்ணெய் = 1 குழி கரண்டி
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்து துண்டு துண்டாக நறுக்கவும். குடமிளகாயையும் விதைகளை உதிர்த்து விட்டு காலங்குலமாக சதுரமாக நறுக்கவும். இஞ்சி தோல் சீவி அரைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, குடமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி அரைத்த இஞ்சி, தயிர், உப்பு இவற்றைக் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடித்ததும் கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து தீயைக் குறைத்து விட்டு கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
அடிக்கடி கிளறி விடாவிட்டால் அடி பிடித்து விடும். சற்று எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு காரக்கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum