Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கத்தரிக்காய் ரசவாங்கி

Go down

கத்தரிக்காய் ரசவாங்கி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:21 pm

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் = அரை கிலோ
சின்ன வெங்காயம் = 50 கிராம்
தக்காளி = 2
பச்சை மிளகாய் = 6
இஞ்சி = சிறிய துண்டு
புளி = அரை எலுமிச்சை அளவு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை காப்பை நீக்கி விட்ட பின் சிறு துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும். புளியை ஒரு கப் நீரில் நன்கு கரைக்கவும்.
வாண‌லியில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வதக்கி தக்காளி சேர்த்து அதையும் வதக்கி புளி நீரை சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட்டு அதில் கத்தரிக்காய் நறுக்கியதைப் போட்டு மூடி வைத்து வேக விடவும்.
ஈரப்பதம் வற்றியதும் சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சுவையான கத்தரிக்காய் ரசவாங்கி தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 17.8g, புரதம் 8g, நார்ச்சத்து 4.9g, கொழுப்பு 27.5g, கொலஸ்ட்ரால் 16mg, சர்க்கரை 11.4g, இரும்பு 6mg, வைட்டமின் “A” 6.4 மி.கி, கால்சியம் 525 மி.கி, சோடியம் 62mg மற்றும் பொட்டாசியம் 618mg காணப்படுகிறது.
இவற்றில் ஊட்டச்சத்து அதிகம் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, காய்ச்சல் ஆகியவற்றை குறைக்கும். எனவே இந்த கத்தரிக்காய் ரசவாங்கியை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum