Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கேரட் கோசுமறி

Go down

கேரட் கோசுமறி

Post  ishwarya on Sat Apr 13, 2013 12:21 pm

தேவையான பொருள்கள்:

கேரட் = அரை கிலோ
வெள்ளரிக்காய் = 1
பச்சை திராட்சை = 1
எலுமிச்சைச் சாறு = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் = 4
இஞ்சி = சிறு துண்டு
பொட்டுக் கடலை = 4 ஸ்பூன்
கொத்தமல்லி = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

கேரட்டையும், வெள்ளரிகாயையும் தனித்தனியாகத் துருவிக் கொள்ளவும். பச்சை திராட்சையை உதிர்த்துக் கொள்ளவும்.
இஞ்சியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக் கடலை ஆகியவற்றை மிக்ஸியில் முடிந்த வரை நன்றாக அரைக்கவும்.
ஒரு அகல பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், பச்சை திராட்சை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கிளறவும். அடுத்து பொட்டுக் கடலை பொடி சேர்த்து ந‌றுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

சுவையான கேரட் கோசுமறி தயார். இதை எல்ல வகை ரைஸோடும் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum