Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கறிவேப்பிலை நெல்லிப்பொடி

Go down

கறிவேப்பிலை நெல்லிப்பொடி

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:12 pm

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – 10
கறிவேப்பிலை (உருவியது) – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – ஒரு கட்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிது

செய்முறை:

நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காய வைக்கவும் (இதுதான் நெல்லிமுள்ளி). எண்ணெயை காயவைத்து பெருங்காயத்தைப் பொரிய விட்டு எடுக்கவும். பிறகு அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி பின் அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும். அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum