Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வெந்தயக் கீரை ரொட்டி

View previous topic View next topic Go down

வெந்தயக் கீரை ரொட்டி

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:15 pm

தேவையானப்பொருட்கள்:

வெந்தயக்கீரை- ஒரு கட்டு
மைதா மாவு – ஒரு கோப்பை
கோதுமைமாவு- முக்கால் கோப்பை
கடலைமாவு- கால் கோப்பை
மிளகாய்த்தூள்- அரை தேக்கரண்டி
சீரகம்- அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள்- கால் தேக்கரண்டி
உப்பு- கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய்- கால் கோப்பை

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும்.
மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்த்து சல்லடையில் சலித்து வைக்கவும்.
பின்பு அதில் சீரகம் மற்றும் கீரையைப் போட்டு கலந்து, சிறிது சிறிதாக நீரை தெளித்து பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
பின்பு அதை சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி மெல்லியதாக தேய்க்கவும்.
பின்பு சூடான தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்.
சுவையான வெந்தய கீரை ரொட்டி தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum