Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அன்னாசி பழ ரசம்

View previous topic View next topic Go down

அன்னாசி பழ ரசம்

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:21 pm

தேவையானப்பொருட்கள்:

அன்னாசி பழத்துண்டு – இரண்டு (வட்டமாக நறுக்கியது).
தக்காளி -ஒன்று
புளி -சிறிய எலுமிச்சைப் பழ அளவு
பருப்பு வெந்த தண்ணீர் – ஒரு கோப்பை
மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
ரசப் பொடி – இரண்டு தேக்கரண்டி
கடுகு -ஒரு தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு -ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -இரண்டு
கறிவேப்பிலை -ஒரு கொத்து

செய்முறை:

அன்னாசி பழத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
புளியை இரண்டு கோப்பை நீரில் கரைத்து அதில் மஞ்சள் தூள் உப்புத்தூள் பெருங்காயம் தக்காளி மற்றும் அன்னாசி பழத்துண்டுகளை போட்டு அடுப்பில் வைத்து வேகவிடவும்.
பின்பு அதில் பருப்பு தண்ணீரை சேர்த்து ரசப் பொடியையும் போட்டு நன்கு கலந்து ரசம் நுரை கட்டியதும் அடுப்பை நிறுத்தவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து ரசத்தின் மீது கொட்டி கலக்கவும்.
சுவையான அன்னாசி பழ ரசம் தயார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum