Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

Go down

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

Post  ishwarya on Sat Apr 13, 2013 1:23 pm

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 4
காலிப்ளவர்- 1
வெங்காயம்- 2
மிளகாய் தூள்- 2டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
இஞ்சி நசுக்கியது – 1 டீஸ்பூன்
பூண்டு நசுக்கியது – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை – 2கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் -ஒரு குழிக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரைவேக்காடாக வேகவைக்கவும்.
காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலையை போடவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு அதில் உருளைகிழங்கு காலிப்பிளவர் பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி சிறிது நீரை தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் கிளறி விட்டு இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum